தமிழ்நாட்டில் இனி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? வெளியான செம குட் நியூஸ்..!!
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக கிராம புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டது. அதன் மூலம் குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஊரணி கரை பகுதியை சுத்தம் செய்யப்பட்டு வந்தது. மேலும், கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து குறுங்காடுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி, ரோடு சுத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றிற்கு 100 நாள் வேலை திட்டம் என பெயரிட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிகரித்து வரும் விலைவாசியின் காரணமாக 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டுமென கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. மாநிலத்தின் அடிப்படையில் 4 முதல் 10% வரை சம்பளம் உயர்த்தப்படும். அதன் அடிப்படையில் ஆந்திராவில் ரூ.300/-, ஹரியானாவில் ரூ.374 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இனி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.319/- ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.