உலகின் அதிசய ரயில் பாதை பற்றி தெரியுமா?… எங்கு உள்ளது?… டிக்கெட் பெறுவதில் ட்விஸ்ட்!
உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாதை எது? சீனாவின் குங்ஹாய் நகரிலிருந்து திபெத்தின் லாசா நகரம் வரை உள்ள பனிமலை ரயில்வே பாதையே உலகின் மிக உயரமான ரயில்வே பாதை. 1,956 கி.மீ. தூரம் நீண்டு செல்கிறது இந்த ரயில்வே பாதை. இந்தப் பாதையில் ‘தங்குலா கணவாய்’ என்ற பகுதி வருகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரத்து 72 அடி உயரத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருப்பது இங்கேதான்.
இந்தப் பகுதி அதிகக் குளிர் நிலவும் பகுதி. உருகும் பகுதியும்கூட. குளிர்காலத்தில் இறுகும் நிலம், கோடையில் உருகிப் பல அடிகள் கீழே இறங்கிவிடும். கடுமையான பனிப்புயலுக்கு மத்தியில் இந்த ரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கியது. 1980களில் தொடங்கிய ரயில்வே பணி, 2006-ம் ஆண்டில் முடிவடைந்து. இப்போது ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
பனி நிலத்தின் மேல் ரயில் பாதை போடுவது ரொம்பப் பெரிய விஷயம். இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. ரயில் செல்லும் பல இடங்களில் ஆக்ஸிஜன் குழாய் அணிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தக் கட்டுப்பாடு. அப்படி அணியாவிட்டால் சீராக மூச்சு விட முடியாது. இந்தப் பாதை வழியாகப் பயணத்தை எல்லோராலும் மேற்கொள்ள முடியாது. அதற்கான உடல் வலிமை இருப்பதை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால்தான் டிக்கெட் கிடைக்கும்.பெய்ஜிங்கிலிருந்து இந்த ரயில் திபெத் போக 3 நாட்கள் ஆகும்.