இந்த பொருட்கள் உங்க வீட்ல இருக்கா..? உடனே தூக்கிப் போடுங்க..!! ரொம்ப ஆபத்து..!!
நம் வீட்டில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள், மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், அவை உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிளாஸ்டிக் கண்டெய்னர்கள் : உணவுகளை பாதுகாக்கவும், அடைத்து வைக்கவும் பிளாஸ்டிக் கண்டெய்னர்களை பயன்படுத்த வேண்டாம். அதிலுள்ள ரசாயனங்கள் பல்வேறு விதமான உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், எவர் சில்வர் கண்டெய்னர்களை பயன்படுத்துங்கள்.
நறுமணப் பரப்பிகள் : நாம் வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறோமோ இல்லையோ, ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும் வாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சந்தையில் விற்கப்படும் ஏர் ஃபிரஷ்னர்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அது நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பதைவிட ஆஸ்துமா போன்ற பல்வேறு சுவாசப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஏர் ஃபிரஷ்னர்களுக்கு பதிலாக நறுமண எண்ணெய்களை பயன்படுத்தலாம். அதைவிட, வீட்டை காற்றோட்டமாக வைத்திருந்தாலே, துர்நாற்றம் வீசுவதை தவிர்க்கலாம்.
நான்-ஸ்டிக் பாத்திரங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்களை சூடாக்கும்போது, அவற்றில் பூசியுள்ள ரசாயனக் கலவைகள் நச்சு வாயுக்களை வெளியேற்றும். அவை புற்றுநோயை உண்டாக்கும். மேலும், உள் உறுப்புகள் செயலிழப்புக்கும் வழிவகுக்கிறது. எனவே பீங்கான், எவர் சில்வர் பாத்திரங்கள், வார்ப்பிரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.
டிரையர் ஷீட்ஸ் : வாஷிங் மெஷின்களில் டிரையர் ஷீட்களை பயன்படுத்துவதன் மூலம் அதில் இருந்து வெளியாகும் நச்சுவாயுக்கள் நமக்கு பலவிதமான உடல் நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். அதற்கு மாற்றாக, கம்பளி உலர் பந்துகளை பயன்படுத்தலாம்.
சுத்தப்படுத்தும் பொருட்கள் : வீடுகள், பாத்திரங்கள் மற்றும் துணிகளை சுத்தம் செய்ய நாம் வாங்கும் பொருட்களில் அம்மோனியா, பிளீச் போன்ற கடுமையான ரசாயனங்கள் இருக்கின்றன. இவை தோல் மற்றும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றுக்கு மாற்றாக வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
பூச்சி மருந்துகள் : பூச்சி மருந்துகளில் கடுமையான ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. அவை தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நரம்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, ரசாயனப் பூச்சிக் கொல்லிகளை தவிர்த்து, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். விரிசல்களை அடைப்பது, பூச்சிகளுக்கான உணவுகளை அகற்றுவது போன்றவற்றை செய்ய வேண்டும்.
Read More : சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது தெரியுமா..? இது தெரிஞ்சா அந்த எண்ணெய்யை பயன்படுத்த மாட்டீங்க..!!