உங்கள் குழந்தைக்கு டயாப்பர் போடுவீங்களா? அப்போ இதை நீங்க கட்டாயம் பண்ணனும்...
முன்பு எல்லாம் டயாப்பர் ஏதோ ஒரு சமயத்தில் மட்டும், பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போதெல்லாம், நாள் முழுவதும் டயாப்பர் அணிந்தே குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. நீங்கள், டயாப்பர்களை எப்போவாது தான் பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உண்மையில், டயாப்பர்களை விட துணியால் செய்யப்பட்ட நாப்கின்கள் சிறந்தது. அப்படி துணியால் செய்யப்பட்ட நாப்கின்னை பயன்படுத்திய பின், நன்கு சுத்தம் செய்து, வெயிலில் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் பாக்டீரியா தொற்றுகள் பரவாமல் இருக்கும். ஆனால் அதே சமயம் நீங்கள் டைப்பரை பயன்படுத்தினால், அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதனால் முடிந்த வரை துணி நாப்கின்களை பயன்படுத்துவது நல்லது.
பிறந்த குழந்தைகளுக்கு நீங்கள் டயாப்பர் பயன்படுதினால், கட்டாயம் அதை நீங்கள் ஒவ்வொரு மணி நேரமும் மாற்றி விட வேண்டும். 4 முதல் 5 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதனால் தான் குழந்தையின் வயதைப் பொறுத்து ஒரு நாளைக்கு 5 முதல் 6 டயப்பர்களை மாற்ற வேண்டும். நீங்கள் டயாப்பர் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகளின் தோலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை துடைப்பதற்கு துடைப்பான்களை பெரும்பாலும் பயன்படுத்தக் கூடாது.
Read more: டீ, காபியில் நாட்டு சர்க்கரை சேர்த்தா சுகர் வராதா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..