முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இவர்களுக்கும் தீபாவளி போனஸ்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! செம குஷியில் தொழிலாளர்கள்..!!

07:26 AM Nov 11, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்க, சாகுபடி பரப்பை அதிகரிக்க, சர்க்கரை ஆலைகள் செயல்திறனை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பருவத்திற்கும் கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்யும் கரும்பு விலைக்கு மேல் கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

கரும்பு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதலமைச்சர் நடப்பு 2022 - 23ஆம் நிதியாண்டில் அரவைப் பருவத்திற்கு கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 வீதம் வழங்கும் வகையில் மொத்தம் ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 6,103 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர்.

Tags :
தமிழ்நாடு அரசுதீபாவளி போனஸ்தொழிலாளர்கள்முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
Next Article