கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான புதிய தொற்றுநோய்.! WHO விடுத்த எச்சரிக்கை..! ஆப்பிரிக்காவில் பரவும் வைரஸின் அறிகுறிகள்
நோய் X என்பது எதிர்காலத்தில் கொரோனாவை போல் பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான நோயாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் குறித்தும், இதனை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.
இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கொரோனா வந்து கோரத் தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றதோ, அதேபோல அடுத்த முறை எதாவது பெருந்தொற்று ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி நடப்பதே இந்த டிசீஸ் எக்ஸ் ஆய்வாகும்.
புது வகை நோய்க்கு தயாராக இருப்பது முக்கியம், ஏனென்றால் வனவிலங்குகளிடையே பரவும் மிக ஆபத்தான வைரஸ், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் ஆற்றல் (Health Tips) கொண்ட ஒரு புதிய தொற்று நோயின் மூலமாக மாறக்கூடும். எனவே, எந்த நேரத்திலும் ஒரு விலங்கினால் வைரஸ் அல்லது பாக்டீரியா உற்பத்தியாகி, அது மனிதர்களுக்குப் பரவி, அவற்றை இரையாக ஆக்கத் தொடங்கும். எனவே, உலக சுகாதார நிறுவனம் (WHO) தீவிர தொற்று நோய் வகையில் இதனை சேர்த்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸை விட "நோய் X" 20 மடங்கு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர், மேலும் இது பற்றிய ஆராய்ச்சி மற்றும் அதனை தடுக்கும் வழிகளை ஆராய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Disease X எவ்வளவு மோசமான நோய் : Disease X இன்னும் கண்டறியப்படாத நோயாக இருந்தாலும் இந்த நோய்க்கிருமி என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிறுவனமும் கணித்து வைத்திருக்கிறது. இந்த Disease X நோயின் பரவலாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமல்லாது, உலகம் முழுமைக்கும் பரவும் ஒரு தொற்றாக இருக்கப் போகிறது. இதனால் இறப்புகள் நிறைய நிகழும். உலக நாடுகளின் பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புகள், சுகாதார அமைப்புகள் அத்தனையிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்த நோயின் தீவிரம் அது உண்டாகக் காரணமாகும் வைரஸ், சுகாதார அமைப்புகளின் செயல்பாடு ஆகியவற்றைப் பொருத்து இருக்கக்கூடும்.
நோய் X இன் அறிகுறிகள்: காய்ச்சல் மற்றும் குளிர்,
கடுமையான சுவாசக் கோளாறு,
தசை மற்றும் மூட்டு வலி,
வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகள்,
விவரிக்க முடியாத இரத்தப்போக்கு அல்லது சொறி,
சோர்வு மற்றும் பலவீனம்.
தலைவலி அல்லது நரம்பியல் தொந்தரவுகள்.