பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு தீமைகளா..! என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா.!
நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்கவழக்கங்களினால் பல புது விதமான நோய்கள் தாக்குகின்றன. துரித உணவுகளாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. மேலும் தற்போது சைவம் சாப்பிட விரும்புபவர்களை விட அசைவம் சாப்பிட விரும்புவர்கள் தான் அதிகமாக இருந்து வருகின்றனர்.
அப்படியிருக்க அசைவ உணவில் பல வகையான சத்துக்கள் இருந்து வந்தாலும் பிராய்லர் கோழி என்று சொல்லப்படும் குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன் ஊசி போட்டு வேகமாக வளரும் கோழிக்கறியை உண்பதால் பலவிதமான நோய்கள் உடலில் உருவாகிறது. இது தெரிந்தாலும் மக்கள் தொடர்ந்து பிராய்லர் கோழியையே விரும்பி உண்ணு வருகின்றனர்.
பிராய்லர் கோழிக்கறி உண்ணுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோய்கள் குறித்து பார்க்கலாம்
1. பிராய்லர் கோழிக்கறி உண்ணுவதால் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் கேன்சர் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.
2. பிராய்லர் கோழிக்கறி உண்ணுவதால் உடல் எடை வேகமாக அதிகரித்து ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படும்.
3. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை உருவாகும்.
4. பெண்களுக்கு கர்ப்பப்பையில் புற்று நோய் வருவதற்கு முக்கிய காரணமாக பிராய்லர் கோழிக்கறி, இருந்து வருவதாக கூறப்படுகிறது.
5. பெண் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழிக்கறி அதிகமாக கொடுத்து வந்தால் சீக்கிரம் பூப்படைந்து விடுவார்கள். மேலும் ஹார்மோனில் மாற்றமடைந்து மனச்சிதைவு நோய்க்கு உள்ளாகுவார்கள் என்றும் ஆய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது.