தீபாவளிக்கு பட்டாசு வாங்கிட்டீங்களா..? எல்லாம் போச்சே..!! காவல்துறை வெளியிட்ட அதிரடி கட்டுப்பாடுகள்..!!
தமிழ்நாட்டில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ரசாயன பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும், வெடிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு தொலைவில் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ வெடிக்கவோ கூடாது. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. மக்கள் நடமாடும் இடங்களில் கவன குறைவாக பட்டாசு வெடிக்கக் கூடாது.
குடிசைப் பகுதிகளிலும் மாடி கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்க கூடாது. மேலும், எரியும் விளக்கு அருகில் பட்டாசு வைக்க கூடாது. ஈரம் உள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்த கூடாது உள்ளிட்ட 19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.