For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"நா யாருகூட உல்லாசமா இருந்தா உனக்கென்ன" தட்டிக்கேட்ட மாமியாருக்கு, மருமகள் செய்த கொடூரம்..

daughter-in-law killed her mother-in-law for illicit relationship
06:32 PM Dec 14, 2024 IST | Saranya
 நா யாருகூட உல்லாசமா இருந்தா உனக்கென்ன  தட்டிக்கேட்ட மாமியாருக்கு  மருமகள் செய்த கொடூரம்
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான ராஜசேகர். இவருக்கு 38 வயதான அமுல் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களுடன் ராஜசேகரின் தாயார் 58 வயதான லட்சுமியும் வசித்து வந்துள்ளார். ராஜசேகர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்துள்ள நிலையில், இவர் தனது வேலை நிமித்தமாக அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று மாத கணக்கில் அங்கு தங்கி விட்டு வருவது உண்டு. தனது கணவர் வீட்டில் இல்லாத போது, அமுலுக்கும் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான சரவணன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், ராஐசேகர் வெளி மாநிலங்களுக்கு செல்வதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட சரவணன், அடிக்கடி அமுல் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

Advertisement

இவர்களின் பழக்கம் குறித்து அறிந்த மாமியார் லட்சுமி, தனது மருமகளை பலமுறை கண்டித்துள்ளார். இதனால் மாமியார், மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் லட்சுமியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், லட்சுமியின் உடலில் காயங்கள் மற்றும் கைரேகைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அமுலுக்கும் சரவணனுக்கும் உள்ள கள்ளத்தொடர்பு குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை நெரும்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஷை சந்தித்த அமுல், அவரது தோழி பாரதி மற்றும் கள்ளக்காதலன் சரவணன், தாங்கள் 3 பேரும் சேர்ந்துதான் கள்ளக்காதலை கண்டித்ததால் லட்சுமியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர் மகேஷ், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர்.

Read more: “மகளின் பிறப்புறுப்பில், தந்தை செய்த காரியம்..”; சொத்துக்காக நடந்த கொடூர சம்பவம்..

Tags :
Advertisement