ஃபெங்கல் புயல் எதிரொலி..!! துறைமுகங்களில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!
வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் ஆனது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (நவ.30) பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் எனவும் இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: வங்கக் கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், கடலூரில் 7ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், நாகையில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரியில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், காரைக்கால் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
10 மாவட்டங்களில் மழை: இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : BREAKING | ”பயங்கர ஆக்ரோஷமா இருக்கும்”..!! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை..!!