BREAKING NEWS | 'CSK' ரசிகர் தூக்கு போட்டு தற்கொலை.! காவல்துறை தீவிர விசாரணை.!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் போரக்ஸ் ட்ரேடராக துபாயில் பணியாற்றி வந்தார். CSK மற்றும் எம்.எஸ் தோனியை சிறப்பிக்கும் வகையில் தனது வீடு முழுவதும் மஞ்சள் வண்ணத்தால் பெயிண்ட் அடித்து ஹோம் ஆப் சிஎஸ்கே ஃபேன் என தனது வீட்டிற்கு பெயர் வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர் சிஎஸ்கே ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
நேற்று இரவு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக சில மர்ம நபர்கள் இவரை தாக்கியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கோபி கிருஷ்ணன் இன்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.