முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"விரைவில் புதிய வசதி.. மற்ற App களின் மூலம் வாட்ஸ்அப் -க்கு நேரடியாக மெஸேஜ் அனுப்பலாம்.."! புதிய அப்டேட் பற்றிய தகவல்கள்.!

11:05 AM Feb 11, 2024 IST | 1newsnationuser4
Advertisement

2 பில்லியன் நபர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வரும் இந்நிலையில், மற்ற ஆப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸஅப் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பல செய்திடல் செயலிகளை பயன்படுத்தும் தேவையை நீக்குகிறது. மேலும் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்ட செய்தி அனுபவத்தைப் பெற இது வழி வகுக்கும் என்று கருதப்படுகிறது.

Advertisement

வாட்ஸ் அப் இன்ஜினியரிங் இயக்குனர் டிக் ப்ரூவர் இதை தெரிவித்தார். இந்த வசதி செயல்பாட்டிற்கு வருவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் அடுத்த மாதம் இது குறித்து கூடுதல் தகவல்கள் வெளி வரலாம் என்று நம்பப்படுகிறது. மெட்டா நிறுவனத்தை கேட் கீப்பராக வைத்து இந்த வசதியை ஆறு மாதத்திற்குள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு நபர்களுக்கான உரையாடலில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. குழு உரையாடல்கள் மற்றும் அழைப்புகளுக்கு தற்போது முக்கியத்துவம் தரப்படவில்லை.

பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இதனை தேர்வு செய்யலாம். மூன்றாம் தளங்களில் இருந்து வரும் செய்திகள், 'மூன்றாம் தரப்பு அரட்டைகள்' என்ற தனிப்பிரிவின் கீழ் வைக்கப்படும். வாட்ஸ்அப்பின் உயர் தனி உரிமை தரங்களும் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுக்கு தளங்களில் செய்தியிடலை இயக்குதில் நிறைய தொழில்நுட்ப சவால்கள் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதனை செயல்படுத்த, மற்ற தளங்களிலும் தனியுரிமை தரத்திற்கான திறந்த தன்மையும், பாதுகாப்பு நுட்பங்களுக்கான சமநிலையும் தேவைப்படும்.

வருகின்ற மார்ச் மாதம் முதல், மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பிற்கான தொழில்நுட்ப தகவலை வாட்ஸ்அப் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களும் இந்த சேவையை பயன்பாட்டில் கொண்டு வருவதற்கு, ஒப்பந்தங்கள் செய்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கூகுள் மெசேஜஸ் மற்றும் ஸ்கைப் ஆகிய தளங்களில், சிக்னல் என்கிரிப்ஷன் நெறிமுறை பயன்பாட்டில் உள்ளது. இதனால் செய்தி அனுப்புவதற்கும் பெறுவதற்கும் நிலையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். எனவே மற்ற தளங்களும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்று வாட்ஸ்அப் விரும்புகிறது.

வாட்ஸ்அப்பின் சுற்றுச்சூழல் அமைப்பில் எந்த பிளாட்பார்ம்கள் சேரக்கூடும் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை. டெலிகிராம், ஸ்னாப், கூகுள், சிக்னல் போன்ற செயலிகள் தங்களது திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை. ஐரோப்பாவின் இதற்கான சட்டதிட்டங்கள் எளிதாக இருப்பதனால் முதன் முதலில் இந்த வசதி, ஐரோப்பாவில் தொடங்கப்படும் என்று நம்பப்படுகிறது. உலகளாவிய வகையில் இதனை பயன்பாட்டில் கொண்டு வருவது நிச்சயமற்றது.

Tags :
Cross platformEncryptionMessagesMessaging appstechnologywhatsapp
Advertisement
Next Article