முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பவுலர்களுக்கு நெருக்கடி!… பேட்ஸ்மேன்களுக்கு சாதகம்!… 2024 ஐபிஎல் தொடரில் புதிய விதி!

08:11 AM Dec 19, 2023 IST | 1newsnationuser3
Advertisement

2024 ஐபிஎல் தொடரில், ஒரு ஓவரில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசலாம் என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று துபாயில் நடைபெறவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2024 ஐபிஎல் தொடரில் மேலும் ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பவுலர் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் மட்டுமே வீச முடியும். அதாவது ஒரு ஓவரில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும்.

போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம். இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கும் பொருந்தும். இதனால் கடந்த சீசனில் ஆல்ரவுண்டர்களுக்கான பங்களிப்பு குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், தற்போதையை புதிய விதி, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இந்த புதிய விதிமுறை இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் இப்போதே குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

Tags :
2024 ஐபிஎல்iplNew ruleபவுலர்களுக்கு நெருக்கடிபுதியவிதி அறிமுகம்
Advertisement
Next Article