முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

3-வது திருமணம் செய்து கொண்ட சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரணி..!! இனி ஜோடியாக இதை செய்யப்போகிறார்களாம்..!!

Annapoorani - Rohith's wedding took place. This is Annapoorani's third marriage. Their wedding, which was called a divine wedding, took place yesterday at Kilpennathur, Tiruvannamalai.
01:45 PM Nov 29, 2024 IST | Chella
Advertisement

அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தவர் பெண் சாமியார் அன்னபூரணி. இவர் தனக்கு தானே கோவில் கட்டிக் கொண்டு நான் தான் கடவுள் எனக்கூறி அருள்பாலித்து வருகிறார். ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த இவர், அரசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர், இறந்துவிட்டதால் அவருக்கு சிலை அமைத்து அவரை அன்னபூரனி வழிபட்டு வந்தார். இந்நிலையில், மூன்றாவதாக ரோகித் என்பவரை அன்னபூரனி திருமணம் செய்துள்ளார்.

Advertisement

செங்கல்பட்டில் 'அன்னபூரணி அரசு அம்மன்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தினார். மேலும், திருவண்ணாமலையில் கீழ்பென்னாத்தூரில் ராஜா தோப்பு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு ஆசிரமம் அமைத்தார். இனிமேல் இங்கு தான் ஆன்மிக பணியை தொடருவேன். யாருக்கும் அருள்வாக்கு சொல்ல மாட்டேன். ஆன்மிகத்தை மட்டும் தான் சொல்வேன் என்று கூறியிருந்தார்.

அவர் கட்டிய கோவிலில் சாமியாக அவரது சிலையையே வடிவமைத்து தனக்கு தானே பூஜை செய்து வந்தார். இவர் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தில், அன்னபூரணியே அம்மன் போல சேலை, அணிகலன்கள் அணிந்து கொண்டு அம்மனாக காட்சியளித்தார். இந்த கும்பாபிஷேக விழாவிலும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு ஆசி பெற்றனர். ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு பாத பூஜை செய்து காலை தொட்டு சூடம் ஏற்றி வழிபட்டனர்.

இந்நிலையில், "தான் ரோகித் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறியிருந்தார். எனது கணவர் அரசு என்பவரை திருமணம் செய்த அதே 28ஆம் தேதி தான் இந்த திருமணம் நடக்க இருக்கிறது. ரோகித் என்பவரும் ஆன்மிகத்துக்காக தன்னையே அர்பணித்து கொண்டவர் தான். அன்றைய தினம் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்று செல்லுங்கள்" என்று கூறியிருந்தார்.

அதன்படி, அன்னபூரணி - ரோகித் திருமணம் நடைபெற்றது. இது அன்னபூரணிக்கு 3-வது திருமணம் ஆகும். தெய்வீக திருமணம் என்ற பெயரில் திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரில் இவர்களது திருமணம் நேற்று நடைபெற்று முடிந்தது. திருமணம் முடிந்த நிலையில், இனி இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

Read More : பெண்களுக்கு ஜாக்பாட்..!! உரிமைத்தொகை ரூ.2,500ஆக உயர்வு..!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

Tags :
அன்னபூரணிதிருமணம்திருவண்ணாமலை மாவட்டம்பக்தர்கள்
Advertisement
Next Article