ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மீது பாலியல் அவதூறு.! காங்கிரஸ் பிரமுகர் அதிரடி கைது.!
உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளவர் மீது அவதூறுகளை பரப்பியதாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரமுகர், கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பிரம்மாண்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டிருக்கும் இந்த ராமர் கோவிலின் பிரம்மாண்டமான திறப்பு விழா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது.
புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தலைமை அர்ச்சகராக மோகித் பாண்டே என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்.
இது தொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ஹிதேந்திர பிதாடியா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரை பற்றி அவதூறு பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.