For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சூப்பர் அறிவிப்பு...! 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் கட்டாயம்...! தமிழக அரசு உத்தரவு...!

06:10 AM Nov 04, 2023 IST | 1newsnationuser2
சூப்பர் அறிவிப்பு     1 முதல் 5 ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் கட்டாயம்     தமிழக அரசு உத்தரவு
Advertisement

1 முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2024-2025 ஆம் கல்வியாண்டில 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும். ஆசிரியர்கள் கற்றல் விளைவுகள் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

இப்பணிமனையில் தொடக்க நிலை வகுப்பறைகளுக்கான (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு திறன்வளர்ப் பயிற்சியை அளிப்பதற்காக பணிமனை 06.11.2023 முதல் 10.11.2023 முடிய யாத்ரி நிவாஸ் பயிற்சி மையம், ஈசான லிங்கம் தெரு, மத்தளங்குளம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுவதால் இணைப்பு பட்டியலில் உள்ள எண்ணிக்கையின்படி தங்கள் மாவட்டத்திற்கேற்ப முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், வட்டார் வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்ய உரிய முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் உரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இப்பணிமனையை திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஒருங்கிணைந்து இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நடத்திடுமாறும் இப்பணிமனைக்கான செலவினங்களை திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன திட்டம் மற்றும் செயல்பாடுகள் நிதியில் இருந்து மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இப்பணிமனையில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள்: 05.11.2023 அன்று மாலை 6 மணிக்குள் பணிமனை மையத்தை சென்றடைவதற்கு ஏதுவாக பங்கேற்பாளர்களை பணிவிடுப்பு செய்யுமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் காவி மற்றும் பயிற்சி நிறுனை முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இப்பணிமனையில் ஏற்கனவே மாநில அளவிலான பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் நீங்கலாக முனைப்புடன் செயல்படக்கூடிய பிரிதொரு ஆசிரியர்களை தெரிவு செய்து இப்பணிமனையில் பங்குபெறும் வகையில் பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement