Drugs: தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கைப்பற்றிய கடலோரக் காவல்படை...!
இந்தியக் கடலோரக் காவல்படை மகாராஷ்டிரா கடற்கரைக்கு அப்பால் சட்டவிரோத டீசல் கடத்தலில் ஈடுபட்ட 'ஜெய் மல்ஹார்' என்ற ஐந்து பேர் கொண்ட குழுவுடன் மீன்பிடி படகை கைப்பற்றியது. மீன்பிடி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத 5 டன் டீசலையும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களையும் கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட படகை மும்பை துறைமுகத்திற்கு கொண்டுச் சென்று காவல்துறையினர், சுங்கத்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் விசாரணையில் இந்தக் குழுவினர் கடலில் மீனவர்களுக்கு 5,000 லிட்டர் எரிபொருளை விற்றது தெரியவந்தது.
கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 55,000 லிட்டர் கணக்கில் வராத டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடலில் டீசல் கடத்தலுக்கு எதிரான மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இது குறிக்கிறது. நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும், கடலோர எல்லைகளைப் பாதுகாப்பதிலும் உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.