For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகன் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கேப்டன் விஜயகாந்த்..!! ட்ரெய்லரை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்..!!

The trailer of the film 'Padai Thalaivan', starring actor Vijayakanth's son Shanmuga Pandian as the hero, has been released.
04:24 PM Dec 14, 2024 IST | Chella
மகன் படத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கேப்டன் விஜயகாந்த்     ட்ரெய்லரை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்
Advertisement

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கும் படை தலைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரின் மறைவு பலரின் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக 'படை தலைவன்' படத்தில் கொண்டு வந்துள்ளனர்.

விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவரது இயக்கத்தில் தற்போது 'படை தலைவன்' என்ற படம் உருவாகியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை யு. அன்பு என்பவர் இயக்கியுள்ளார். செப்டம்பர் மாதமே 'படை தலைவன்' ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்ட நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இந்நிலையில் 'படை தலைவன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த முன்னோட்ட வீடியோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு ஒரு யானைக்கும் அதனுடைய பாகனுக்கும் இடையிலான உறவை கூறும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரின் இறுதி காட்சியில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முகம் இடம்பெற்றுள்ளது. பின்னணியில் அவரது ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்' பாடலும் ஒலிக்கிறது. சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' படத்திலும் இந்த பாடல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'படை தலைவன்' படத்திலும் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.

Read More : ஆமா, நாங்க பாஜகவின் ’பி டீம்’ தான்..!! ரஜினியை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் திமுக குடும்பம்..!! கடுமையாக விமர்சித்த சீமான்..!!

Tags :
Advertisement