ஏசி வாங்கினால் மட்டும் போதாது..!! இதை பண்ணலனா கூலிங் வராது..!!
ஏசி வாங்கினாலும், ஏசியின் வெளிப்புற யூனிட் எங்கு வைத்தால் வீடு அதிக குளிர்ச்சியாக இருக்கும், வெளிப்புறத்தில் எப்படி நிறுவப்பட வேண்டும் என்பது அதிகமானோருக்கு தெரிவதில்லை. ஏசியில் வெளிப்புற அமைப்புகள் பால்கனி, கூரை, அல்லது கட்டிடத்தின் வெளிப்புற பக்கத்தில் நிறுவப்படலாம். ஆனால், காற்று ஓட்டத்தை தடுக்காத வகையில் இந்த வெளிப்புற பகுதி நிறுவப்பட வேண்டும்.
பொதுவாக ஏசி வெளிப்புற அமைப்பில், சரியான காற்றோட்டத்தை உறுதி செய்ய அனைத்து பக்கங்களில் இருந்தும் 2 அடி இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். ஸ்பிலிட் ஏசியின் வெளிப்புற பகுதி சுவரில் பொருத்தப்படும் போது, சரியான காற்றோட்டத்திற்காக சுவர் மற்றும் கூரையிலிருந்து சிறிது இடைவெளி விடப்பட வேண்டும். ஏசியின் வெளிப்புற அமைப்பை நிறுவ சிறந்த இடமாக கூரை அமைகிறது.
வெளிப்புற அமைப்பு எளிதாக கூரை மீது வைக்கப்படும். ஆனால், ஒருவர் முதல் தளத்தில் வசிக்கிறார் என்றால், 4-வது மாடியின் கூரையில் வெளிப்புற அலகு வைப்பது புத்திசாலித்தனமாக இருக்காது. அத்தகைய நிலையில், அதை பால்கனியில் வைக்கலாம். மேற்கூறிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஏசியின் வெளிப்புற அமைப்பு வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதே சமயத்தில், உட்புற மற்றும் வெளிப்புற ஏசி சாதனங்களின் ஆயுட்காலம் பெரிதும் அதிகரிக்கிறது. மேலும், மின் கட்டணமும் குறைவாகவே வருகிறது.
Read More : வீட்டில் இருந்து கொண்டே மாதம் ரூ.20,500 சம்பாதிக்கலாம்..!! போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா..?