For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உ.பி: உடன் பிறந்த தங்கையை வன்புணர்வு.!ஆபாச படங்களை பார்த்த அண்ணண் செய்த அருவருப்பான செயல்.!

02:33 PM Feb 06, 2024 IST | 1newsnationuser4
உ பி  உடன் பிறந்த தங்கையை வன்புணர்வு  ஆபாச படங்களை பார்த்த அண்ணண் செய்த அருவருப்பான செயல்
Advertisement

உத்தரப்பிரதேச மாவட்டத்தில் முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆபாச படங்களுக்கு அடிமையான, 19 வயது இளைஞர் ஒருவர், தனது உடன் பிறந்த சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரை கொலை செய்துள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் மாவட்டத்தில், சஞ்சு குமார் (19) என்ற இளைஞர் தனது தாய் மற்றும் தங்கையோடு வசித்து வருகிறார். சஞ்சு குமாரின் தந்தை ஒரு வருடத்திற்கு முன்புதான் உயிரிழந்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, அவரது தாய் தனது அண்ணனின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்பொழுது சஞ்சு குமாரும் அவரது தங்கையும் வீட்டில் தனியாக இருந்திருக்கின்றனர். ஆபாச படங்களுக்கு அடிமையான சஞ்சு குமார், முந்தைய நாள் இரவு தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்திருக்கிறார். தனது தாய் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தனது தங்கையை வன்புணர்வு செய்திருக்கிறார். அவரது தங்கை யாரிடமாவது இதை சொல்ல நேரிடும் என்று பயந்த சஞ்சு குமார், தனது சகோதரியின் கழுத்தை நெரித்து கொலையும் செய்திருக்கிறார்.

இறந்த பெண்ணின் மாமா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விரைந்து வந்து சஞ்சு குமாரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். குற்றவாளிடமிருந்து அவரது செல்போனை பறிமுதல் செய்த பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

தன்னுடைய சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லாமல் ஒரு பெண் இறந்தது, அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

Tags :
Advertisement