அடடா.! நோய்யை உங்க உடம்பிலிருந்து கத்தரிக்கும் காய் பற்றி தெரியுமா.? அனைத்திற்கும் தீர்வாகும் கத்தரிக்காய்.!
கத்தரிக்காய் நாம் சமையலில் பயன்படுத்தும் முக்கியமான ஒரு காய்கறி ஆகும். இது சாம்பார் கூட்டு பொரியல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கத்தரிக்காய் நல்ல சுவையாக இருப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவற்றில் நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் தயாமின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இவற்றில் ஆன்டிஆக்சிடென்ட் மூலக்கூறுகளும் நிறைந்துள்ளது.
கத்திரிக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கத்தரிக்காயில் இருக்கும் ஆன்தோசயனின் என்ற நொதி இதய நோய்களை ஏற்படுத்தும் வீக்கங்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் இவற்றால் ரத்த அழுத்தமும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பெருமளவு இதய நோய் பாதிப்பு குறைகிறது. கத்தரிக்காய் அதிகமாக காணப்படும் நார்ச்சத்துக்கள் நம் உடலில் கெட்ட கொழுப்புக்களின் உருவாக்கத்தை தடுக்கிறது. இதன் காரணமாக ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிவதும் தடுக்கப்படுகிறது. மேலும் கத்தரிக்காய் உடல் எடை இழப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக விளங்குகிறது.
கத்தரிக்காயில் காணப்படும் பாலிபினால்கள் அந்தோசயனின் மற்றும் குளோரோஜினிக் மூலக்கூறுகள் செல் சேதமடைவதை தடுக்கிறது. இதன் காரணமாக உடலில் கேன்சர் கட்டி தோன்றுவது தடுக்கப்படுகிறது. கத்திரிக்காயில் இருக்கும் ஆன்தோசயனின் மூளையின் செல்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவை மூளையை பாதிக்கும் காரணிகளிலிருந்தும் காக்க உதவுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி, உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகிறது. கத்திரிக்காயில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் கத்தரிக்காய் சாப்பிடுவது சிலருக்கு தோல் அலர்ஜி மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.