முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

#Breaking | ரூ.2 ஆயிரத்தை நெருங்கியது சிலிண்டர் விலை..!! மீண்டும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு..!!

07:25 AM Nov 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

Advertisement

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.44 உயர்ந்துள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ஒரே மாதத்தில் 2-வது முறையாக உயர்த்தியுள்ளது எண்ணெய் நிறுவனங்கள். நவம்பர் 1ஆம் தேதி ரூ.101.50 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 44 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை ரூ.1,942 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
சிலிண்டர் விலைவிலை உயர்வு
Advertisement
Next Article