பாஜகவின் மொத்த பிளானும் வேஸ்ட்..!! ஜார்க்கண்டில் 3-வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் ஹேமந்த் சோரன்..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 20ஆம் தேதியும் நடைபெற்றது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக, அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜேஎம்எம் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் கடுமையான போட்டி நிலவியது. தொடக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டது.
பிறகு இந்தியா கூட்டணி எதிர்பாராத வகையில், முன்னிலை வகித்தது. தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ தகவல்படி, ஜேஎம்எம் தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஜேஎம்எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. பாஜக 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹைட் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
சிராய்கெல்லா தொகுதியில் பாஜக சம்பாய் சோரன், ஜேஎம்எம் கணேஷ் மஹாலி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் செம்பாய் சொரன் முன்னிலை வக்கிறார். இதன் மூலம் ஜேஎம்எம் தொடர்ந்து 3-வது முறை ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. பாஜக தேர்தலுக்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோரை அழைத்து வந்து, ரூ.500 கோடி வரை செலவு செய்கிறது என ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், பாஜகவின் திட்டங்களை எல்லாம் தவிடிபொடியாக்கி ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.