பாஜக மாபெரும் வெற்றி..!! அடுத்த முதல்வர் யார்..? மகாராஷ்டிராவில் நீடிக்கும் குழப்பம்..!!
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், இங்கு ஆட்சியை பிடிக்க 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக இங்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டன.
மறுபுறம் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கேரவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இத்தேர்தலில், பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி, பாஜக 129 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 50 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 44 இடங்களிலும் முன்னிலை பெற்றது. அதன்படி பார்த்தால் அந்த கூட்டணி மொத்தம் 223 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மறுபுறம் எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 12 இடங்கள் என மொத்தம் 51 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவீஸ் முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவீஸ், 3 கட்சிகளும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், மகாராஷ்டிர முதல்வராக அடுத்து யார் வருவது என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
Read More : பாஜகவின் மொத்த பிளானும் வேஸ்ட்..!! ஜார்க்கண்டில் 3-வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் ஹேமந்த் சோரன்..!!