For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தல்... முதல்வருக்கு அண்ணாமலை ஆதாரத்துடன் கொடுத்த பதிலடி...!

BJP state president Annamalai has said that Karunanidhi supported the 'one nation, one election' system.
06:56 AM Dec 13, 2024 IST | Vignesh
ஒரே நாடு ஒரே தேர்தல்    முதல்வருக்கு அண்ணாமலை ஆதாரத்துடன் கொடுத்த பதிலடி
Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2023ஆம் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ஒரே நாடு, ஒரே தேர்தலில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து பல மாதங்களாக ஆராய்ந்து கடந்த மார்ச் மாதம், இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இத்திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவைத் தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது,"ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்ற மோசமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் செயல்படுத்த முடியாது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தத்துவதைச் சிதைத்து, ஆட்சியைச் சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 'ஒரேநாடு ஒரே தேர்தல்'மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி. முதலமைச்சர் தனது தந்தையின் சுயசரிதை நூலை படிக்கவில்லை என்று தெரிகிறது. ஒழுங்கற்ற தேர்தல் சுழற்சி அரசு திட்டங்களை செயல்படுத்த இடையூறு என கருணாநிதி கூறியிருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement