For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"சொந்த அண்ணனை சைட் அடிப்பியானு கேப்பாங்க.." சூர்யாவின் தங்கைக்கு நேர்ந்த சம்பவம்..

biruntha faced issues by her friends
09:11 AM Dec 13, 2024 IST | Saranya
 சொந்த அண்ணனை சைட் அடிப்பியானு கேப்பாங்க    சூர்யாவின் தங்கைக்கு நேர்ந்த சம்பவம்
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகுமாரின் மகள் தான் பிருந்தா. சூர்யா - கார்த்தியின் சகோதரியான இவர், எந்த ஒரு இடத்திலும் தான் ஒரு பிரபலத்தின் மகள் என்பதை வெளிப்படுத்தியதில்லை. ' கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் நடிக்க பிருந்தாவிற்கு வாய்ப்பு கிடைத்த போதும் சிவகுமார் அதற்க்கு மறுத்துவிட்டார். சிறு வயதில் இருந்தே கர்நாடக இசை கற்று வந்த இவருக்கு, நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை, ஆனால் அவருக்கு பின்னணிப்பாடகியாக மாறவேண்டும் என்ற ஆசை இருந்தது. கார்த்திக் ராஜா, பிருந்தா பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவரை ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து சென்று பாட வைக்க முயற்சி செய்துள்ளார்.

Advertisement

ஆனால் பிருந்தா தனது தந்தைக்கு பயந்து பாட மறுத்துவிட்டார். இவர் தனது குடும்பத்தில் உள்ளவர்களின் சிபாரிசும் இல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு பின்னணி பாடகியாக தனதுஹ் திறமையை நிருபித்தார். இவர் அகரம் அறக்கட்டளைக்காக ஒரு பிரார்த்தனை பாடலை பாடி உள்ளார். மேலும், அவர் தனது அண்ணி ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தால் போன்ற படங்களில் பாடியுள்ளார். இவர் கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ2 திரைப்படத்தில், விஷால் சந்திரசேகர் இசையில் 'சுவாசமே' என்கிற மெலடி பாடலை பாடியிருந்தார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி போன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறும்போது, தான் கல்லூரியில் படிக்கும் போது, இவர் பிரபலத்தின் மகள் என்று யாருக்கும் தெரியாதாம். இதை பற்றி வெளியே சொல்ல பிருந்தாவுக்கும் விருப்பம் இல்லையாம். சக தோழிகள் எதேர்சையாக ஒரு நாள் உன் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்டார்களாம். அதற்க்கு பிருந்தா தான் இருக்கும் இடமான தி நகர் கிருஷ்ணா ஸ்ட்ரீட்னு கூறியுள்ளார். அதற்க்கு அவரது தோழிகள், "ஏய் அங்க தான் சூர்யா வீடு இருக்கு. உனக்கு தெரியுமா என்று கேட்டார்களாம். அதற்க்கு பிருந்தா ஆமாம் பக்கத்து வீடு தான் என்று கூறினாராம். அப்போ அவரது தோழிகள், சூர்யாவை சைட் அடிப்பியா என்று கேட்டாங்களாம். இதனால் ஆடிப்போன பிருந்தா, அவர் எனக்கு அண்ணன் மாதிரி என்று கூறினாராம்.

Read more: Samuthirakani | ‘சமூக அக்கறைமிக்க படைப்பாளி’ நடிகர் சமுத்திரக்கனி பற்றி பலருக்கு தெரியாத தகவல்..!!

Tags :
Advertisement