BIG BREAKING | காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சற்றுமுன் காலமானார். அவரது வயது 75. கடந்த சில வாரங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார்.
பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆக்டிவாக செயல்பட்டபோது தமிழக அரசியலில் தீவிரமாக களமாடினார். அவரது அனல் பறக்கும் பேச்சு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
இளங்கோவன் அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக மீண்டும் வெற்றி பெற்றார். மகன் உயிரிழந்ததால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-ஆன ஈவிகேஸ் இளங்கோவனின் மறைவு செய்தி தமிழக அரசியலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.