Mud bath : ஆயுர்வேதத்தின் முதன்மை சிகிச்சையான மண் குளியல்.? என்னென்ன நன்மைகள் உள்ளன தெரியுமா.!?
பொதுவாக நாம் சிறுவயதில் மண்ணில் நன்றாக விளையாடிய காலத்தில் கூட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது மண் என்றாலே அழுக்கு, தொடுவதற்கே பயம் என்று அருவருப்படையும் குழந்தைகள் பலர் இருந்து வருகின்றனர். அதையும் மீறி மண்ணில் விளையாடும் ஒரு சில குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாக உடலில் நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மண்ணில் விளையாடவே குழந்தைகளும், பெற்றோர்களும் பயப்படுகின்றனர்.
ஆனால் இந்த மண்ணை வைத்து உடல் முழுவதும் பூசி மண் குளியல் செய்யும்போது நமக்கு பல்வேறு நோய்கள் குணமாகின்றன என்று ஆயுர்வேதம் மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குளியல் முறையை தற்போது வரை பல ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவமனைகளில் செய்து வருகின்றனர்.
பஞ்சபூதங்களில் முதன்மையானது நிலம் இந்த நிலத்தில் உள்ள மண்ணை வைத்து மருத்துவ சிகிச்சை செய்து நம் உடலில் ஏற்படும் பல வகையான நோய்கள் விரட்டப்படுகிறது. மேலும் இந்த மண் குளியலின் மூலம் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் நம் உடலுக்கு அதிகப்படியாக கிடைக்கின்றன. உடலில் உள்ள கெட்ட நச்சுகளையும், கெட்ட நீரையும் உறிஞ்சி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அடிவயிற்றில் களிமண் நிறைந்த கலவையை நிரப்பி வைப்பதால் உடல் குளிர்ச்சி அடைந்து செரிமான பிரச்சனை, வயிற்று பகுதியில் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் காய்ச்சல், நீண்ட நாள் ஒற்றைத் தலைவலி, உடல் வலி போன்றவற்றை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய மண் குளியலை, களிமண் மற்றும் கரையான் புற்றிலிருந்து எடுக்கப்பட்ட மண்களை வைத்து இந்த மருத்துவம் செய்யப்படுகின்றது.