முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உருளைக்கிழங்கை இப்படி சமைத்து சாப்பிடுங்க.! கண்டிப்பாக வாயு பிரச்சனை வராது.!?

09:30 AM Feb 08, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ள உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் வாயு தொல்லை அதிகமாகும் என்பதால் அதிகமானோரும் இதை சாப்பிடுவதில்லை. உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை தரும் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லதல்ல.

Advertisement

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இதை உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செரிமான மண்டலம் சீராக செயல்படவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவுக் செய்கிறது. மேலும்  வாயு தொல்லை இருப்பவர்கள் உருளைக்கிழங்கை எப்படி சமைத்து சாப்பிடலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: உருளை கிழங்கு - 1/4 கிலோ, பூண்டு உரித்தது - 1கைப்பிடி அளவு, பெருங்காய தூள் - சிறிதளவு, உப்பு, எண்ணெய், கடுகு - தேவையான அளவு, மிளகாய் தூள் - 1டீஸ்பூன்,

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை தோல் உரிக்காமல் நன்றாக கழுவி குக்கரில் வேக வைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின்பு ஒரு கைப்பிடி அளவு பூண்டையும் எண்ணெயில் வறுக்க வேண்டும். பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுடன் நறுக்கி வதக்கிய பூண்டுடன் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி மசாலா வாடை போன பின்பு அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம். உருளைக்கிழங்குடன் பூண்டை சேர்த்துக் கொள்ளும் போது உடலில் வாயு தொல்லைகள் ஏற்படாது. மேலும் உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் அதிகரிக்கும்.

Tags :
garlicGastric problempotato
Advertisement
Next Article