For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆண்மையை அதிகரிக்கும் ஜாதிக்காய் வேறு என்னென்ன நன்மைகள் தரும் தெரியுமா.!?

05:24 AM Jan 17, 2024 IST | 1newsnationuser5
ஆண்மையை அதிகரிக்கும் ஜாதிக்காய் வேறு என்னென்ன நன்மைகள் தரும் தெரியுமா
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகமாக கிடைக்கும் மூலிகைகளில் ஒன்று தான் ஜாதிக்காய். ஜாதிக்காயின் பழத்தை ஊறுகாயாக செய்யலாம். மேலும் இந்த ஜாதிக்காய் பல நன்மைகளை உடலுக்கு தருகிறது. குறிப்பாக ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க உதவி செய்கிறது. ஜாதிக்காயில் வேறு என்னென்ன நன்மைகளை தரும் என்பதை குறித்து பார்க்கலாம்?

Advertisement

1. ஜாதிக்காயை தூளாக பொடித்து பசும்பாலில் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
2. மன அழுத்தம் மனப்பதட்டம், மனச்சோர்வு ,தூக்கமின்மை போன்ற மன சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்கிறது.
3. குறிப்பாக ஆண்களின் விந்தணுவின் உற்பத்தியை பெருக்கி குழந்தையின்மை பிரச்சனையை சரி செய்கிறது.
4. ஜாதிக்காய், சுக்கு, சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர செரிமான கோளாறு நீங்கி குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
5. ஜாதிக்காய் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்றில் புழு போன்றவற்றை சரி செய்யும்.
6. ஜாதிக்காயை பொடி செய்து தைலமாக காய்ச்சி பல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
7. பிறந்து ஆறு மாதமான குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு ஜாதிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
8. ஜாதிக்காய் பொடியை தேனுடன் கலந்து முகத்திலும், உடலிலும் பூசி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கி சருமம் பளிச்சென்று தோற்றமளிக்கும்.
9. உடல் வலியால் ஏற்படும் காய்ச்சலுக்கு ஜாதிக்காயை பயன்படுத்தலாம். இவ்வாறு பல்வேறு நன்மைகளை தரும் ஜாதிக்காயை மூலிகைகளின் அரசன் என்றும் கூறி வருகின்றனர்.

Tags :
Advertisement