அடிக்கடி இட்லி சாப்பிடுபவரா நீங்கள்??? அப்போ கட்டாயம் இதை படியுங்கள்..
பெரும்பாலான தென்னிந்தியா மக்களின் உணவு சென்றால், அது இட்லி தான். காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் இட்லியை சாப்பிடுவது உண்டு. இட்லியை ஆவியில் வேக வைப்பதால் அது எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால் தான், உடல் நலம் சரி இல்லாதவர்கள் கூட இட்லியை சாப்பிடுவது உண்டு. இட்லியில் கலோரிகள் ரொம்பவே குறைவு, அதே சமயம் நார்ச்சத்து மிகவும் அதிகம். இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், குடல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. இட்லி சாப்பிடுவதால் தேவையான புரதம் கிடைப்பதோடு, நமக்கு அதிக நேரம் பசிக்காது. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இட்லியை சாப்பிடலாம். மேலும், இட்லி உளுந்து மாவில் தயாரிக்கப்படுவதால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைத்து இரத்த சோகை பிரச்சனைக்கான குணமாகும்.
இட்லியில் பல நன்மைகள் இருந்தாலும், இட்லிக்கு சட்னி வகைகள், சாம்பார், பொடி வகைகள் என அனைத்தையும் வைத்து சாப்பிடாமல், அதில் ஏதேனும் ஒன்றினை மட்டும் வைத்து சாப்பிட்டால் உடம்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் வைத்து சாப்பிட வேண்டும் என்ற நான்கு இட்லிக்கு நான்கு வகை பொடிகள், மூன்று வகை சட்னிகள் என சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். மேலும், இட்லி பொடியில் அதிகம் எண்ணெய் அல்லது நெய் சேர்ப்பதால் அதிக கலோரிகளுக்கு வழிவகுக்கும். அதே போல், காலை இட்லியுடன் வடை வைத்து சாப்பிட கூடாது. இதனால் உடல் எடை அதிகரிக்கத் தான் செய்யும்.