கருணைக்கிழங்கு இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா.! என்னென்ன நோய்களை தீர்க்கும்.!?
மருத்துவ குணங்கள் அதிகம் உள்ள கருணைக்கிழங்கை சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி, இடுப்பு வலி, முதுகு வலி மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் உடல் வலியையும் இது சரி செய்கிறது. உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு கருணைக்கிழங்கிற்க்கு உண்டு.
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட உதவி புரிகிறது. புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் கருணைக்கிழங்கில் அதிகப்படியாக இருப்பதால் இது கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ரத்த அழுத்தம், கேன்சர், சர்க்கரை நோய் ஏற்படாமலும் உடலை பாதுகாக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் கருணைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் நெஞ்செரிச்சல், அல்சர், வயிற்றுப்புண், வயிற்றில் அதிகப்படியான அமிலம் சுரப்பது போன்றவற்றை தடுத்து வருகிறது. கருணைக்கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் இதை சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலத்தை சரி செய்து குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
ஆயுர்வேத மருந்து கடைகளில் கருணைக்கிழங்கு லேகியம் கிடைக்கும். இதை தினமும் சாப்பிட்டு வந்தால் மூலம் நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். மூலநோய் வந்தவர்களும் இதை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. மேலும் கருணைக்கிழங்கை நன்றாக வேக வைத்து அதில் வெல்லம் சேர்த்து மசித்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை உடனடியாக சரி செய்யும்.
இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கருணைக்கிழங்கு சாப்பிடும் போது ஒரு சிலருக்கு அரிப்பு மற்றும் அலர்ஜி ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு கருணைக்கிழங்கை சமைப்பதற்கு முன்பாகவே அரை மணி நேரம் சுடுதண்ணீர், மோர், அல்லது புளி கரைத்த தண்ணீரில் ஊற வைத்து சமைத்தால் இந்த அலர்ஜி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.