அவகோடா சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உடலில் ஏற்படும் தெரியுமா.!?
பொதுவாக பழங்கள் என்றாலே அவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒன்றாகவே இருந்து வருகிறது. பழங்களில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருந்து வருகின்றன. இவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்களை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக வெண்ணை பழம் என்று அழைக்கக்கூடிய அவகோடா பழத்தை உண்பதன் மூலம் என்னென்ன சத்துக்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்?
அவகோடா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, நியாசின் போலெட், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கும் அவகோடா பழத்தை உண்பதன் மூலம் ஒரு சில நோய்களை கட்டுப்படுத்தலாம். அவை என்னென்ன நோய்கள் தெரியுமா?
1. அவகோடா பழத்தை உண்பதன் மூலம் 50 வயதிற்கு மேலானவர்களை சாதாரணமாக தாக்கும் அல்சைமர் நோய் வரவிடாமல் தடுக்கிறது.
2. நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்தி மூளையில் செல்களை பாதுகாக்கிறது.
3. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
4. உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் அவகோடா பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
5. அவகோடா படத்தில் மோனோசரைட்டட் கொழுப்பு உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளை கொண்ட அவகோடா பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் வேண்டுமென்று கூறப்பட்டு வருகிறது.