முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆட்டுப்பால் குடிப்பதால் உடலில் இவ்வளவு நன்மைகளா.? என்னென்ன தெரியுமா.!?

05:44 AM Jan 21, 2024 IST | 1newsnationuser5
Advertisement

உலக அளவில் மாட்டு பாலை விட தற்போது ஆட்டுப்பால் தான் அதிகளவு மக்கள் பருகி வருகின்றனர். ஆட்டு பாலில் மாட்டுப் பாலை விட அதிக அளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய குணங்களும் உள்ளன என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஒரு சிலருக்கு மாட்டு பால் குடிப்பதனால் ஒவ்வாமை ஏற்படலாம். அப்படிப்பட்ட நபர்கள் மாட்டு பாலை தவிர்த்து விட்டு ஆட்டுப்பால் குடித்து வரலாம்.

Advertisement

எருமை மற்றும் பசுவின் பாலில் உள்ள கொழுப்பு வகைகளை ஒப்பீடு செய்யும்போது ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பு குறைந்த அளவே இருப்பதால் ஆட்டுப்பால் எளிதாக ஜீரணம் செய்ய முடிகிறது. ஆட்டுப்பாலை தயிராகவும் பயன்படுத்தலாம். இது பசும்பாலின் தயிரை விட மிகவும் மென்மையானது என்று கூறப்படுகிறது.

மேலும் பலருக்கும் பால் குடிப்பதினால் ஏற்படும் அலர்ஜிகளை ஆட்டுப்பால் தடுக்கிறது. ஆட்டு பாலில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒலிகோசாக்கரைடுகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி அலர்ஜி, ஒவ்வாமை போன்றவைகளை எதிர்க்கிறது. 1 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு முதலில் மாட்டுப்பால் கொடுப்பதை விட கொழுப்பு தன்மை குறைவாக இருக்கும் ஆட்டு பாலை கொடுப்பது வயிற்றுக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றன.

வைட்டமின்கள், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள ஆட்டுப்பாலை குடிப்பதன் மூலம் எலும்புகள் பலப்படுகிறது.   குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்வதற்கு பெரிதும் உதவி புரிகிறது. தாய் பாலில் உள்ள ஒலிக்கோசாக்கரைடுகள் தான் ஆட்டு பாலிலும் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை தாராளமாக குடித்து வரலாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
Benefitsgoatmilkஆட்டுப்பால்
Advertisement
Next Article