For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலையில் வெறும் வயிற்றில் கிராம்பு டீ குடித்து பாருங்க.! என்னென்ன நோய்களை விரட்டும் தெரியுமா.!?

06:01 AM Jan 24, 2024 IST | 1newsnationuser5
காலையில் வெறும் வயிற்றில் கிராம்பு டீ குடித்து பாருங்க   என்னென்ன நோய்களை விரட்டும் தெரியுமா
Advertisement

தற்போதுள்ள காலகட்டத்தில் நம்மில் பலரும் அன்றாடம் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காபி போன்ற பானங்களை குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். வெறும் வயிற்றில் இத்தகைய பானங்களை குடிக்கும் போது அவை பல்வேறு நோய்களை உடலில் ஏற்படுத்தும். காலையில் எழுந்தவுடன் டீ மற்றும் காபி குடிப்பது சுறுசுறுப்பை ஏற்படுத்தினாலும் ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை. இதற்கு பதில் கிராம்பு டீ குடித்துப் பாருங்கள். இதன் சுவையும் அதிகம் மற்றும் உடலில் பல நோய்களையும் தீர்க்கிறது.

Advertisement

பாரம்பரிய மருத்துவத்தில் கிராம்பு டீ முக்கிய பங்கு வகிக்கிறது. கிரீன் டீ, தேயிலை டீ, பிளாக் டீ போன்ற பல்வேறு வகையில் தேநீர்கள் இருந்தாலும் கிராம்பு டீயில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளதால் இதை அடிக்கடி குடிக்கலாம் என்று வல்லுநர்கள் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். கிராம்பு டீ குடிப்பதால் உடலில் ஏற்படுத்தும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்?

1. ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் நிரம்பியுள்ள கிராம்பு தேநீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலில் இறந்த செல்களை நீக்கி புது செல்கள் உருவாக செய்கிறது. தோல் பளபளப்பாக இருக்கும்.
2. கிராம்பில் உள்ள யூஜெனால் என்ற வேதிப்பொருள் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகப்படுத்தி செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை தூண்டச் செய்கிறது.
3. கிராம்பில் வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால் இதனை தேநீராக செய்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாகும்.
4. மருத்துவ பண்புமிக்க கிராம்பு தேநீர் குடிப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.
5. கிராம்புகளில் உள்ள யூஜேனால் சளியை குறைத்து மூச்சுக்கு குழாயில் உள்ள கிருமிகளை அழிக்க செய்கிறது.
6. உடலில் ஏற்படும் வீக்கம், வலி, அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகளை கிராம்பு தேநீர் சரி செய்கிறது.
7. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், சுறுசுறுப்பை ஏற்படுத்தவும் கிராம்பு தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
8. கிராம்பு தேநீரை இரவில் குடித்து வந்தால் இதில் உள்ள மணமும், மருத்துவ குணமும் உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைத்து தூக்கத்திற்கு உதவுகிறது.
9. முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகளை கிராம்பு டீ குணமாக்குகிறது.
10. பாக்டீரியா மற்றும் வைரஸ்களில் இருந்து உடலை பாதுகாத்து தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கிராம்பு டீயை தினமும் காலையில் அல்லது தூங்குவதற்கு முன்பு குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.

Tags :
Advertisement