ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்..!! கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு..!!
கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில், முதல் பரிசுத்தொகை ரூ.10 கோடி ஆகும். இரண்டாம் பரிசு ரூ.50 லட்சம் ஆகும். முதல் பரிசு கண்ணூரை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு கிடைத்துள்ளது. கேரளாவில் மாநில அரசே லாட்டரி சீட்டு விற்பனையை நடத்தி வருகிறது. கேரள அரசுக்கு லாட்டரி விற்பனை மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ரூ.75 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான பரிசுத்தொகையுடன் தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது.
அதுபோக பம்பர் லாட்டரி சீட்டுக்களும் சீசனுக்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்றது. முதல் பரிசு ரூ.10 கோடி கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.250 ஆகும். இந்த லாட்டரி டிக்கெட்டின் விற்பனை சக்கை போடு போட்டது. 36 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், 33.6 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
கேரள மாநில எல்லையோர மாவட்டங்களில் உள்ள தமிழர்களும் விரும்பி சென்று லாட்டரி சீட்டுக்களை வாங்கி வந்தனர். கடந்த கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு புதுவையை சேர்ந்தவருக்கு கிடைத்திருந்தது. இதனால், சம்மர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசுத்தொகை அடிக்க அதிர்ஷ்டசாலி யார் என்பதை சேட்டன்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது.
முதல் பரிசு SC308797 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது. கன்னூர் மாவட்டத்தில் உள்ள கர்திகாபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான நாசீர் என்பவர்தான் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி என்பது தெரியவந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமைதான் இந்த லாட்டரி டிக்கெட்டை அவர் வாங்கியிருக்கிறார். அதாவது குலுக்கல் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் நசீர் டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். சாதாரண ஆட்டோ டிரைவரான நாசர் ஓவர் நைட்டில் 10 கோடிக்கு அதிபதியாகியுள்ளார். 50 லட்சம் கொண்ட இரண்டாவது பரிசுத்தொகை SA 177547 - என்ற டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது.
Read More : சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்தி வைப்பு..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!