முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திடீரென விலகிய அஸ்வின்!… காரணம் என்ன?… பிசிசிஐ முன்னாள் துணை தலைவர் போட்ட பதிவு!

07:00 AM Feb 17, 2024 IST | 1newsnationuser3
Advertisement

500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய வரலாறு படைத்த நிலையில், திடீரென தொடரில் இருந்து அஸ்வின் விலகியது குறித்து பிசிசிஐ முன்னாள் துணை தலைவர் ராஜீவ் சுக்லா பதிவிட்டுள்ளார்.

Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சாக் கிராவ்லியின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மைல்கல் சாதனையை எட்டினார் ரவிச்சந்திரன் அஸ்வின். 500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய உலக கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஜேமி ஆண்டர்சன், அனில் கும்ப்ளே, ஸ்டூவர்ட் பிராட், க்ளென் மெக்ராத், வால்ஸ், நாதம் லயன் முதலிய 8 வீரர்களுக்கு பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய 9வது உலக பவுலராக அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

ஒரு பெரிய மைல்கல் சாதனையொட்டி சச்சின், அனில்கும்ப்ளே, நாதன் லயன் முதலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் வரை அனைவரும் அஸ்வினுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஸ்வின் அவசரமாக சென்னை திரும்பியிருப்பதாகவும், குடும்ப எமெர்ஜென்சி காரணமாக 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்து பிசிசிஐ முன்னாள் துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தனது எக்ஸ் பக்கத்தில், அஸ்வினின் அம்மா விரைவில் குணமடைய வாழ்த்துகள். அம்மாவை சந்திப்பதற்காக அவசர அவசரமாக ராஜ்கோட் டெஸ்ட்டில் இருந்து சென்னைக்கு சென்றுள்ளார் அஸ்வின் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
காரணம்திடீரென விலகிய அஸ்வின்பிசிசிஐ முன்னாள் துணை தலைவர் பதிவு
Advertisement
Next Article