முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தை அஸ்வின்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

04:17 PM Feb 16, 2024 IST | 1newsnationuser6
Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில், இந்திய அணி 445 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் கிராலியை அவுட்டாக்கியதன் மூலம் இந்திய வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Advertisement

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற, தொடர் 1 -1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ஜடேஜா இருவரும் சதம் விளாச, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்து இருந்தது.

ஜடேஜா 110, குல்தீப், ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர். 2-வது நாளான இன்று, ஜடேஜா 112 ரன்களுக்கும், குல்தீப் யாதவ் 4 ரன்களுக்கும் அவுட்டாகினர். ஆனால், துருவ் ஜூரல், அஸ்வின் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இறுதியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 445 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியில் கிராலி, பென் டக்கெட் ஆகியோர் துவக்கம் தந்தனர். அணியின் ஸ்கோர் 89 ரன்னாக இருந்தபோது, அஸ்வின் சுழலில் கிராலி (15) கேட்சானார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பெறும் 500-வது விக்கெட்டாகும்.

டெஸ்டில் 500 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை அஸ்வின் தனது 98-வது டெஸ்டில் படைத்துள்ளார். இதன்மூலம் குறைந்த டெஸ்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (87) உள்ளார். அதேபோல், குறைந்த பந்துகளில் 500 விக்கெட் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலிலும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

Tags :
500 விக்கெட்டுகள்அஸ்வின்இந்தியா - இங்கிலாந்துடெஸ்ட் கிரிக்கெட்
Advertisement
Next Article