முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஊருக்கு போக ரெடி ஆகிட்டீங்களா..? இன்று முதல் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

07:12 AM Nov 10, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்காக சிறப்பு கட்டண ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, நவம்பர் 10ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நவம்பர் 11ஆம் தேதி மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டு குளித்துறை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கண்ணூர் வழியாக காலை 5.15 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

நவம்பர் 12ஆம் தேதி மங்களூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் முறையில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக அதிகாலை 5.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :
சிறப்பு ரயில்தீபாவளி பண்டிகைதெற்கு ரயில்வேபயணிகள்
Advertisement
Next Article