முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இளைஞர்களே மாரடைப்பு பயமா..? அப்படினா தினமும் இந்த உணவுகளை மறக்காம சாப்பிடுங்க..!!

Adding more green vegetables to your daily diet can prevent heart related problems.
05:10 AM Dec 13, 2024 IST | Chella
Advertisement

மாரடைப்பு என்றால் பொதுவாக முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் வரும். ஆனால், 20 வயது 25 வயது உடைய இளைய தலைமுறைகளும் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். அதே போல மரபு வழியாக குடும்பத்தினர் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டால், மற்றவருக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். இது எப்போது ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

Advertisement

அதிக தூரம் நடந்து செல்லும் போதோ, அதிகமாக படியேறும் போதோ உடலளவில் கடுமையான செயல்களில் ஈடுபடும் போதோ, மன அழுத்தத்தில் இருக்கும் போதோ நெஞ்சுவலி ஏற்படும். குறிப்பாக சிலருக்கு நெஞ்சுவலி ஏற்படும் போது ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும். ஆனால், ஒரு சிலர் எந்த ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வில் இருக்கும் போதே நெஞ்சுவலி வரும். இந்த நிலை மிகவும் ஆபத்தானது. இதற்கு அறிகுறிகளாக நெஞ்சில் லேசான வலி ஆரம்பித்து பின் அது படிப்படியாக தாடை, கை, கழுத்து எனவும் சில நேரங்களில் முதுகு வரையிலும் பரவக்கூடும்.

இந்த அறிகுறிகள் தொடர்ந்து கொண்டே இருந்தால், உடனடியாக உடலை கவனிக்க வேண்டியது கட்டாயம். அதே நேரம் நெஞ்சுவலி இருக்கும் ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், அதனை அவர்கள் சரியாக கையாண்டால் வலி வராமல் தடுத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மாரடைப்பு வராமல் தடுக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் :

* தினமும் சாப்பிடும் உணவில் பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கலாம்.

* புளூபெர்ரி, ஸ்டாபெர்ரி போன்ற பழங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும், இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் பெர்ரி பழங்கள் உதவும்.

* பிரக்கோலி, கீரைகள், குடைமிளகாய் போன்றவற்றில் வைட்டமின் ஏ, சி, பி விட்டமின்ஸ் என இதயம் ஆரோக்கியமாக இருக்க சத்துகள் அதிகமாக உள்ளது. எந்த ஒரு பச்சைக்காய்கறிகளிலும் நார்ச்சத்து உள்ளது. அது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைத்து இரத்தக்குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கும்.

* மாதுளை இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தை குறைத்து இரத்த நாளங்கள் சீராக சுருங்கி விரிய உதவுகிறது.

* பாதாம், வால்நட் போன்றவற்றில் நல்ல கொழுப்புகள் போன்ற சத்துக்கள் உள்ளது.

* ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கும். உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.

* அசைவ உணவுகளில் மிகவும் முக்கியமான உணவு மீன். இதில் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகளவு உள்ளது. இது இதய குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பு அமிலங்களின் அளவை அதிகரிக்க செய்கிறது.

* இதயத்தின் நண்பன் என்று சொல்லக்கூடிய பூண்டு, வெந்தயத்திலும் இதயத்தை பாதுகாக்கும் பல்வேறு சத்துக்கள் உள்ளது. இது போன்ற இயற்கையான இதய ஓட்டத்தை சீராக வைத்திருக்கும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Read More : அடடே..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! Typist பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

Tags :
இயற்கை உணவுஉணவுமாரடைப்புஹார்ட் அட்டாக்
Advertisement
Next Article