முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உலக அதிசயங்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.! தமிழ்நாட்டின் அதிசயங்கள் என்னென்ன தெரியுமா.!?

07:38 AM Jan 21, 2024 IST | 1newsnationuser5
Advertisement

உலகத்தில் 7 அதிசய இடங்கள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. அந்த வகையில் நம் தமிழ்நாட்டில் தற்போது வரை பல வியக்கத்தக்க இடங்கள் இருந்து வந்தாலும் முன்னோர்களால் கட்டமைக்கப்பட்ட அதிசயமான, மக்களை ஆச்சரியப்படுத்தும் இடங்கள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில இடங்கள் குறித்தும், அங்குள்ள ஆச்சரியமான விஷயங்கள் குறித்தும் பார்க்கலாம்?

Advertisement

1.  தமிழ்நாட்டில் திருநெல்வேலி அருகே திருக்குறுங்குடி எனும் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் யாழி சிலை ஒன்று உள்ளது. அந்த சிலையின் வாயின் உள்ளே ஒரு உருண்டை உள்ளது. அதை தொடவோ, சுற்றவோ முடியும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. இதை அங்குள்ள மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.
2. தஞ்சாவூர் பெரிய கோவில் - இந்தக் கோவிலில் நம் முன்னோர்கள் அந்த காலத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்பது குறித்தும், நம் தமிழ்நாட்டின் கலாச்சாரம் குறித்தும் பலவிதமான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டங்களிலேயே தமிழர்கள் கட்டிடக்கலைகள் சிறந்து விளங்கினர் என்பதற்கு முன்னுதாரணமாக இந்த கோயில் உள்ளது.
3. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - இந்தக் கோயிலில் பூலோக சக்கரம் என்ற ஒரு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓசோன் படலம் குறித்து உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஓசோன் குறித்து கண்டுபிடிக்கப்பட்டதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குறிப்பிட்டுள்ளது.
4. மாமல்லபுரம் வான் இறை கல் - 250 டன் எடையை கொண்ட இந்த உருண்டை வடிவ கல் எந்தவித பிடிப்பில் இல்லாமல் மலையில் 1500 வருடங்களுக்கு மேலாக நிற்கிறது. பாதுகாப்பு கருதி அரசாங்கம் இதை நகர்த்த முயற்சி செய்தாலும் தோல்வியையே அடைந்தது. தமிழ்நாட்டின் அதிசயங்களில் முக்கியமானதாக இந்த கல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
5. நாகப்பட்டினத்தில் சிக்கல் என்ற ஊர் உள்ளது. அங்குள்ள சிங்காரவேலன் சுப்பிரமணிய கோயிலில் முருகர் நரகாசுரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அந்த நேரத்தில் முருகனின் சிலை அதிகமாக வேர்க்கும். வதம் முடிந்ததும் சிலையில் வேர்வை வடிவது நின்றுவிடும். இதன் காரணம் என்ன என்பது குறித்து இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு தமிழ்நாட்டில் எந்த விதமான நவீன பொருட்களும் கண்டுபிடிக்காத காலகட்டத்திலேயே கோயில்களில் இவ்வளவு அதிசயமும், ஆச்சரியங்களும் நிறைந்த வண்ணம் கட்டியிருப்பது நம் முன்னோர்களின் பெருமையை எடுத்துரைக்கிறது.

Tags :
Amazingtemples
Advertisement
Next Article