முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ADMK | தமிழகமே பரபரப்பு..!! இரட்டை இலை யாருக்கு..? இன்று வெளியாகிறது தீர்ப்பு..!!

07:28 AM Mar 16, 2024 IST | 1newsnationuser6
Advertisement

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதியை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தல் பற்றிய அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றிகரமாக தொகுதி பங்கீட்டையும் முடித்து விட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் கடந்த தேர்தல்களில் ஒன்றாக பயணித்த அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இந்த முறை எதிர் துருவங்களாக போட்டியிடுகின்றன. பாஜக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்ட முறிவை தொடர்ந்து இரண்டு கட்சிகளும் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சில காலங்களுக்கு முன்பு அதிமுக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு கட்சியின் சின்னம் லெட்டர் பேட் பேட்டி கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தங்களது நிபந்தனை அற்ற ஆதரவை பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடக் கோரிய மனுவின் மீதான தீர்ப்பு நேற்று வெளியாக இருந்தது. இந்நிலையில், திடீரென தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Read More : Raadhika Sarathkumar | ”அண்ணாமலையுடன் பழகி வருகிறேன்”..!! ”40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்”..!! நடிகை ராதிகா பேச்சு..!!

Advertisement
Next Article