அடேங்கப்பா!... 500 ஏக்கரில் கோவில்!… இதுதான் உலகின் மிகப்பெரியது!… எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?
இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம், ஆனால் இந்துக் கோயில்களைப் பற்றி பேசினால், அவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். உலகில் உள்ள 6 பெரிய இந்து கோவில்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகின் பெரிய மத கட்டிட வளாகம் என்ற கின்னஸ் சாதனையை கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வாட் வளாகம் செய்துள்ளது. 500 ஏக்கர் அளவில் பரந்து விரிந்து கிடக்கும் அங்கோர் வாட் வளாகத்திற்குள் 72 நினைவு சின்னங்கள் இருக்கிறதாம். இந்த மொத்த வளாகத்தையும் சுற்றி 4200அடி சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
அங்கோர் வாட் 200,000 க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நவீன கம்போடிய நகரமான சீம் ரீப்பின் வடக்கே சுமார் ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. கம்போடியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அங்கோர் வாட் முதலில் இந்து கடவுளான விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆனால் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புத்த கோவிலாக மாறியது.
இப்பகுதியின் கெமர் மொழியில் "கோயில் நகரம்" என்று மொழிபெயர்க்கப்படும் இக்கோவில், 1113 முதல் 1150 வரை இப்பகுதியை ஆண்ட இரண்டாம் சூர்யவர்மன் பேரரசரால் கட்டப்பட்டது, இது அவரது பேரரசின் மாநில கோயிலாகவும் அரசியல் மையமாகவும் இருந்தது. அதன் பின்னர் சூர்யவர்மன் பதவி விலகியபோது அங்கோர் வாட் நகரமும் களை இழந்தது.
அதன் பின்னர் உருவான புதிய பேரரசர் ஜெயவர்மன் VII தனது தலைநகரை அங்கோர் தோம் என்ற இடத்திற்கு மாற்றினார். அதேபோல அவர்களின் மாநில கோவிலை பேயோனுக்கு மாற்றினார். அதே நேரம் இப்பகுதியின் புத்த மதத்திற்குள் அங்கோர் வாட்டின் முக்கியத்துவம் அதிகரித்ததால், அந்த இடத்தைச் சுற்றியுள்ள புராணக்கதைகளும் அதிகரித்தன.
பல பௌத்தர்கள் கோவிலின் கட்டுமானம் இந்திரன் கடவுளால் கட்டளையிடப்பட்டதாகவும், வேலை ஒரே இரவில் நிறைவேற்றப்பட்டதாகவும் நம்புகிறார்கள். இருப்பினும், அறிஞர்கள் கூற்றுப்படி, அங்கோர் வாட் கட்டுவதற்கு பல தசாப்தங்கள் ஆனது. 30 ஆண்டுகள், 300,000 தொழிலாளர்கள் மற்றும் 6,000 யானைகள் பணியாற்றி கட்டியதாக கூறுகின்றனர்.
இந்து மற்றும் பௌத்த நம்பிக்கைகளின்படி, கடவுள்களின் இல்லமான மேரு மலையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் அங்கோர் வாட் கோயிலின் ஐந்து கோபுரங்களும் மேரு மலையின் ஐந்து சிகரங்களாக கருதப்படுகிறது. சுவர்கள் மற்றும் அகழி சுற்றியுள்ள மலைத்தொடர்கள் மற்றும் கடலுக்கு ஒப்பிடப்படுகின்றன. இந்த கோவிலின் பிரதான சன்னதி மேல் இருக்கும் கோபுரம் சுமார் 70 அடிக்கு உயர்கிறது. கோயிலுக்கு வடக்கே பேரரசரின் அரண்மனை இருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் போர், பூகம்பம், காரணமாக இது சேதமடைந்துவிட்டது.
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில் என்றும் அழைக்கலாம். டெல்லியில் அமைந்துள்ள அக்ஷர்தாம் கோயில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த கோவில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அயோத்தியில் ராமர் கோவில் நான்காவது இடத்தில் உள்ளது. எகனாமிக் டைம்ஸ் படி, இந்த கோவில் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதன்படி, இது உலகின் நான்காவது பெரிய இந்துக் கோயிலாகும். ஜனவரி 22ம் தேதி இந்த கோவிலில் ராம்லாலா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள நடராஜர் கோயில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் பிரமாண்டத்தை ஒருமுறை தரிசிப்பவர் தன் வாழ்நாளில் மறக்கமாட்டார்.
தமிழ்நாட்டின் அண்ணாமலையார் கோயில் 6வது இடத்தில் உள்ளது. 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இக்கோயில் உலகின் மிக அழகான கோவில்களில் ஒன்றாகும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.