9, 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள்...! அரசு போக்குவரத்து துறை மாஸ் அறிவிப்பு...!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 9-ம் தேதி வியாழக்கிழமை அன்று 250 கூடுதல் பேருந்துகளும், 10-ம் தேதி வெள்ளிக்கிழமை 750 கூடுதல் பேருந்துகளும், 11-ம் தேதி சனிக்கிழமை 520 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் தொடங்கப்பட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட் விற்பனை 3 வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 82,000 மேற்பட்டோர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பவும், அவரவர் ஊர்களுக்கு செல்லவும் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.