நடிகை கீர்த்தி சுரேஷ் கணவரின் சொத்து மதிப்பு, எத்தனை கோடி தெரியுமா??
தமிழ் திரை உலகில் பல ரசிகர்களை கொண்ட நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பை சிலர் கேலி செய்தாலும், இவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்களும் பலர் உள்ளனர். முன்னாள் நடிகை மேனகா சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்றவர் தான் கீர்த்தி சுரேஷ். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் கதையை வைத்து எழுதப்பட்ட மகாநதி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.
தனது திரை வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோரின் ஆசியுடன், தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தின் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் ஆண்டனி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூ. 41 கோடி என்றும் அவருடைய கணவர் ஆண்டனிக்கு ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சொத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more: “சொந்த அண்ணனை சைட் அடிப்பியானு கேப்பாங்க..” சூர்யாவின் தங்கைக்கு நேர்ந்த சம்பவம்..