அமானுஷ்யங்கள் நிறைந்த கிராமம்!… உலகிலேயே இங்கதான் அதிக பேய்கள் இருக்கு!… எந்த நாட்டில் தெரியுமா?
பேய், பிசாசு, ஆவி என்று ஏகப்பட்ட அச்சுறுத்தக்கூடிய பல கதைகள் இருக்கின்றன. பல கிராமங்களில் இது போன்ற கதைகள் இப்போது வரை உலவி வருகின்றன. உலகிலேயே அதிகமாக பேய்கள் இருக்கும் இடம் என்று ஜப்பானில் உள்ள ஒரு கிராமத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை பற்றிய முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.
அதீதமான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, எதிர்காலத்தில் இருக்கக்கூடிய வசதிகள் என்று புகழ் பெற்ற ஜப்பானில், பேய்களுக்கென்றே பிரத்யேகமான ஒரு ஊர் இருக்கிறது. ஜப்பானில் ஒரு ஒதுக்குப்புறமான கிராமம், முதலில் பார்க்க சாதாரணமாகத் தான் தெரியும். ஆனால், அதீதமான ரகசியங்கள் மறைந்துள்ளன. இந்த ஊரின் பெயர் நகோரோ. உலகின் அதிகமான அமானுஷ்யம் நிறைந்த இடமாக அறியப்படுகிறது.
நகோரோ கிராமத்துக்கு தைரியமானவர்கள் மட்டுமே செல்ல முடியும். பயம் என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் மட்டுமே இந்த கிராமத்திற்கு சென்று வர முடியும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், இறந்தவர்கள் எல்லாமே தினமும் உயிருடன் வருவது போன்ற அமைப்புடன் கிராமம் இயங்குகிறது.
நகோரோவில் பேய் என்பது சுவாரஸ்யமான ஒரு கான்செப்ட். அந்த ஊரில் முழுக்க முழுக்க மனிதர்களுக்கு மாற்றாக மனிதர்கள் அளவில் உயிருடன் இருப்பது போல பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளன. சபிக்கப்பட்ட ஊராக அறியப்படும் நகோரோவில் கிட்டத்தட்ட 350 மனித அளவில் இருக்கும் பேய் பொம்மைகள் அங்கு வாழ்ந்த மனிதர்களை அகற்றி விட்டன அல்லது அங்கு இருந்தவர்கள் இறந்து போயினர். இதில் மிகவும் ஆச்சரியப்படும்படியாக, அங்கு வாழ்ந்த நபர்களை விட பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பொம்மைகள் இருக்கின்றன.
மிகவும் கூர்ந்து பார்க்கும் போது, இந்த பொம்மைகள் மிகவும் அமானுஷ்யமான தன்மையைக் கொண்டுள்ளன. உறைந்த முகம், வெளிறிய தோற்றம், என்று இந்த பொம்மைகளைப் பார்க்கும் போதே மனதில் பயம் தோன்றும், அங்கிருந்து சென்று விடலாமா என்று நினைக்கத் தோன்றும். இந்த மாற்றத்தின் வரலாறு, ட்சுசுகி அயானோ என்ற இந்த அற்புதமான கலைஞரிடம் இருந்து தொடங்குகிறது. இவர் தான் இந்த அசாதரணமான மற்றும் அமானுஷ்யமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தீவிர கலை ரசிகரான இவர், தான் பிறந்த ஊரான நகோரோவுக்கு 2000களின் தொடக்கத்தில் தன்னுடைய அப்பாவுடன் சென்றுள்ளார். சொந்த ஊரை பார்க்க விரும்பிய அயனோவுக்கு அது கிட்டத்தட்ட ஆளில்லாத, கைவிடப்பட்ட கிராமமாக தோன்றியுள்ளது. எனவே, அங்கு மனிதர்களுக்கு பதிலாக, மனிதர்களை போல கலைப்பொருட்களை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து செயல்படத் தொடங்கினார்.
அப்போது குழந்தைகள் யாருமே இல்லை மற்றும் பள்ளியும் 2012 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. அதன் பிறகு இவர் வடிவமைத்த பொம்மைகள் அமானுஷ்யத் தன்மையுடன், ஒரு காலத்தில் இருந்த மனிதர்களுக்கு ரீப்லேஸ்மென்டாக இருந்து வருகின்றன. இது போன்ற ஒரு விசித்திரமான அமானுஷ்ய ஊரை உருவாக்கிய அயானோவுக்கு “scarecrow mother” என்ற பட்டப்பெயர் உள்ளது. இவர் நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு வழங்கிய நேர்காணலில், “இங்கு இனி குழந்தைகளை காணவே முடியாது. ஆனால், இங்கு நிறைய குழந்தைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் நான் குழந்தைகள் பொம்மையை உருவாக்கினேன்’ என்று தெரிவித்தார்.