பெண்களை அனுமதிக்காத யுனெஸ்கோ பாரிம்பரிய சின்னம்!… ஏன் தெரியுமா?… நிர்வாண ஆண்களுக்கு மட்டுமே அனுமதி!
ஜப்பான் நாட்டில் ஆண்கள் மட்டுமே செல்லும் ஓகினோஷிமா என்ற தீவுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் கியுசு தென் மேற்கு கடலில் அமைந்துள்ள முக்கிய தீவுகளில் ஓகினோஷிமா ஒன்றாகும். கொரிய தீபகற்பகுதிக்கு அருகே இந்த தீவு அமைந்துள்ளது. இந்த தீவுக்கு நாற்றாண்டுகாலமாக ெபண்கள் செல்ல அனுமதியில்லை என்ற பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்போதும் இந்த தீவுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த தீவில் உள்ள பெண் கடவுளை வணங்குவதற்காக ஆண்டுதோறும் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தீவில் உள்ள கோயிலை ஷிண்டோ என்ற மதகுரு நிர்வாகம் செய்து வருகிறார். கடந்த ஆண்டந்த 2 மணிநேரம் நடந்த திருவிழாவில் 200 ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
இதில் முக்கியமாக இந்த தீவுக்குள் வந்தவுடன் ஆண்கள் அனைவரும் ஆடைகளை களைந்து நிர்வாணமாக கடலில் குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்புதான் கோயிலுக்கு செல்ல முடியும். இந்த விதிமுறை இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவுக்கு அதிகமான பயணிகள் வர ஆர்வம் காட்டி வருவதால், எதிர்காலத்தில் இந்த தீவுக்கு பார்வையாளர்கள் வருகையைமுற்றிலும் நிறுத்த கோயில் மதகுருக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந் கோயிலின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ தீவில் உள்ள கோயில் 17ம்நூற்றாண்டைச் சேர்ந்தது. மிகவும் ஆபத்தான கடல்பகுதியில் அமைந்து இருப்பதால், நூற்றாண்டுகளாக பெண்கள் செல்ல ஆபத்து நிறைந்த தீவாக இருந்தது. இதனால், பெண்களை அழைத்துச் செல்ல முன்னோர்கள் தயங்கி அவர்களுக்கு தடைபோட்டனர். அந்த தடையை இன்னும் நீடிக்கிறது. மற்றவகையில் பெண்கள், ஆண்கள் என்ற வேறுபாடு என்று இல்லை” என்று தெரிவித்தார். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள், பார்வையாளர்கள் தங்களின் கடற்பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தங்க மோதிரங்கள், நகைகளை காணிக்கையா செலுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், இந்த கோயிலில் ஏராளமான மதிப்பு மிக்க பொருட்கள் இருக்கின்றன. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தீவுக்கு இப்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் அந்தஸ்தை வழங்கி கவுரப்படுத்தி உள்ளது.