தலைமுறைக்கும் நினைவிருக்கும் தல தீபாவளி!... சினிமா பிரபலங்களின் கொண்டாட்டம்!
எத்தனையோ தீபாவளி கொண்டாடினாலும் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் துணையுடன் கொண்டாடும் முதல் தீபாவளியை யாராலும் மறக்க முடியாது. புதிதாக திருமணம் ஆன ஆண்களுக்கு தல தீபாவளி என்பது, வாழ்க்கையில் என்றுமே மறக்கவே முடியாத தீபாவளியாக அமைந்து விடும். ஏன் என்றால் திருமணத்திற்கு முன்பு எத்தனையோ தீபாவளியை பெற்றோர்கள், உறவினர்களுடன் கொண்டாடி இருப்போம். அதில் சந்தோசம் இருக்குமே தவிர முழு மன நிறைவு நிச்சயமாக இருக்காது. திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் தீபாவளி ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விடும். அந்தவகையில் சிறப்பான தல தீபாவளியை கொண்டாடும் திரைப்பிரபலங்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகரான அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மிகவும் எளிமையாக இவர்களது திருமணம் எந்த ஒரு ஆரம்பரமும் இல்லாமல் நடந்தது. இந்த புதுமண ஜோடிக்கு இந்த தீபாவளி தல தீபாவளி என்பதால், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் கவின் தற்போது, நல்ல கதைக்களம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் தனது நீண்ட நாள் தோழி மோனிக்காவை ஆகஸ்ட் 20ந் தேதி திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புது ஜோடிக்கும் இது தலதீபாவளி ஆகும்.
நடிகை அமலா பாலு கேரள மாநிலம், கொச்சியில் நவம்பர் 5ந் தேதி கத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நடிகை அமலா பால் தமிழில், மைனா, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஜோடியும் தலதீபாவளி கொண்டாட உள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் தொழிலதிபரின் மகள் நர்மதாவை கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்கள் தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடியுள்ளனர். வரும் தீபாவளி இவர்களுக்கு தல தீபாவளி ஆகும். ஹன்சிகா மோத்வானி – சோஹேல் கதூரியா தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா மோத்வானி தொழிலதிபர் சோஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களும் தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
தமிழில் அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படத்தின் மூலம் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கௌதம் கார்த்திக் உடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது நட்பு ஏற்பட்ட காதல் ஆக மாறியது. இருவரும் கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
பாலிவுட் நடிகர்கள் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 7ம் தேதி ராஜஸ்தானில் பிரமாண்டமான வரவேற்புடன் திருமணம் செய்து கொண்டனர். பல திரைப் பிரபலங்களும் அவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா தனது காதலரும் ஆம் ஆத்மி எம்பியுமான ராகவ் சத்தாவை கடந்த செப்டம்பர் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்ற அவர்களின் திருமண விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நாஞ்சில் விஜயன், கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு எது பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கடந்த செப்டம்பர் மரியா என்ற பெண்ணை கரம் பிடித்தார். இந்த தம்பதிகளுக்கும் இந்த தீபாவளி தல தீபாவளி ஆகும்.