வேலை இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு...! வரும் 18-ம் தேதி... யாரும் மிஸ் பண்ணிடாதீங்க...!
கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மின்னாம்பள்ளியில் வருகின்ற 18.11.2023 அன்று சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, சேலம் மாவட்டத்தில் மூன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மூன்று வேலை வாய்ப்பு முகாம்களும் 05.08.2023, 19.09.2023 மற்றும் 18.11.2023 ஆகிய நாட்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டு, முதலாவது வேலை வாய்ப்பு முகாம் 05.08.2023 அன்று சேலம் சோனா கல்விக்குழும வளாகத்திலும், இரண்டாவது வேலை வாய்ப்பு முகாம் 19.09.2023 அன்று நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியிலும் நடத்தப்பட்டன.
இதன் மூன்றாவது நிகழ்வாக, வருகின்ற 18.11.2023 அன்று மின்னாம்பள்ளி அருகில் உள்ள இராமலிங்கபுரத்தில் அமைந்துள்ள ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், ஜவுளி வங்கி சேவைகள். காப்பீடு, மருத்துவம் கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி அருகில் இராமலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு. 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர் தொழிற் கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியினை உடை உடையவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 9499055941 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.