For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"தம்பி, ரீல் அந்து போச்சு.!" காவல்துறை வாகனத்தை பயன்படுத்தி Instagram reel எடுத்த நபர் கைது.!

10:08 AM Feb 19, 2024 IST | 1newsnationuser4
 தம்பி  ரீல் அந்து போச்சு    காவல்துறை வாகனத்தை பயன்படுத்தி instagram reel எடுத்த நபர் கைது
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், காவல்துறையின் வாகனத்தை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் ரீல் (Instagram reel) எடுத்துள்ளார். காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்த நேரத்தை பயன்படுத்தி, அவர் அந்த ரீலை எடுத்தது தெரிய வந்தது. அந்த ரீல் வைரலான நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் உள்ள காஜியாபாத்தில், மொயின் கான் என்ற இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் எடுப்பதற்காக காவல்துறையின் வாகனத்தை பயன்படுத்தியுள்ளார். இந்திராபுரம் பகுதியில் உள்ள கணவாணி பாலம் அருகே போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது, அவர்களின் வாகனம் காலியாக இருந்ததை கவனித்த அந்த இளைஞர், அதனை ரீல் எடுக்க பயன்படுத்தியுள்ளார்.

சிவப்பு நிறத்தில் கோட் சூட் அணிந்து, கையில் குளிர்பானத்துடன் அவர் காவல்துறையின் மஹிந்திரா பொலிரோவின் பக்கவாட்டுப் படிக்கட்டில் இருந்து இறங்கும் வகையில் அந்த ரீல் படமாக்கப்பட்டிருந்தது. பின்னணியில் தோரணையான இசையும் ஒலிக்க, மிடுக்காக இளைஞர் நடந்து வந்த அந்த ரீல் வைரலானது.

அந்த ரீல் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த ரீல் வைரலான நிலையில், தற்போது அந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல் மோ, பலரும் இவ்வாறு சேட்டைகள் செய்வது வழக்கமாகி போன நிலையில், இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

English Summary: A man from Uttar Pradesh was arrested for making Instagram reel using Police vehicle.

Tags :
Advertisement